யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களுக்கு இழப்பீடு

யுத்தம் நிலவிய காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்புமறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷவின் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நீதி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் மூலம் வட மாகாண யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கும் சேவைகளை மேலும் முறையாக வழங்குவதை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக யாழ் மாவட்டத்தில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சின் அலுவலகர்களும், உரிய நிறுவனங்களின் மேலதிகாரிகளும் இழப்பீட்டு அலுவலகத்தினால்யாழ் மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யுத்த நிலை நிலவிய காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அங்கு பொதுச் சொத்துக்கள் மற்றும்அது தொடர்பான இழப்பீடுகள், அரச சொத்துக்கள் மற்றும் அது தொடர்பான இழப்பீடுகள், மரணமடைந்தோர் மற்றும் காயமடைந்தோர் தொடர்பான இழப்பீடுகள் மற்றும் சேதமடைந்த மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டது.

வடக்கு, கிழக்கில் நிலவிய போர் சூழலின் காரணத்தால் பாதிக்கப்பட்டடோர்களுக்கு இழப்பீட்டை வழங்கி நிவாரணம் அளிக்கும் நோக்கில் இழப்பீட்டு அலுவலகம் 2018இலக்கம் 34ஐக் கொண்ட இழப்பீட்டுக்கான அலுவலகச் சட்டத்தினால் தாபிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். பீ. எஸ். சமன் குமாரி, இழப்பீட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் நசீமா அஹம்மட் ஆகியோர் உள்ளிட்ட அரச அலுவலகர்களும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

இதேவேளை கடந்த காலத்தில் நிலவிய யுத்த சூழல் காரணமாக காணாமல் போன யாழ் மாவட்ட மக்களின் உறவினர்களுக்கு நீதியை நிறைவேற்றுவதற்கு அவர்களால் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்கான உரிய தகவல்கள் யாழ். காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டது  குறிப்பிடத்தகக்து.


Add new comment

Or log in with...