IMFயிடமிருந்து நிச்சயமாக சாதகமான பதில் கிடைக்கும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவிப்பு

அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக 6பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து   பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். 

மேலும் ரூபாயை நிலைப்படுத்த மேலும் ஒரு பில்லியன் டொலரையும் அவர் கோரியுள்ள நிலையில் இதற்கு சாதகமான பதில் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். 

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என விரும்புவோர் பிரதமருக்கு ஆதரவாக இருந்தால், சாதகமான முடிவு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஒருமித்த கருத்தே அதற்கான ஒரே வழி என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்தார். 

இதேவேளை மாற்று வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தர்ப்பத்தை வழங்குவார் என்றும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...