எரிபொருள் நெருக்கடியால் ரயில் சேவைக்கு பாதிப்பு

- புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவிப்பு

தற்போதைய எரிபொருள் நெருக்கடி தொடருமானால் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி காரணமாக புகையிரத திணைக்கள கொள்ளளவு நீடிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

நிதி, போக்குவரத்து மற்றும் எரிபொருள் பிரச்சினைகளால் தற்போது அதிகளவான மக்கள் ரயில்களை பயன்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்த அவர், அண்மைக் காலமாக ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு குறைந்த ரயில் கட்டணங்களும் பங்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இக்கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக ரயில்வே திணைக்களம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது. அனைத்து ஊழியர்களுக்கும் உத்தியோகபூர்வ புகையிரத குடியிருப்புகள் வழங்கப்படவில்லை எனவும், எனவே அவ்வாறான ஊழியர்கள் பொதுப் போக்குவரத்து அல்லது தனியார் வாகனங்களைப் பயன்படுத்தி வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும், ஊழியர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் கிடைக்கவில்லை.

எனவே தொழிலாளர்கள் கடமைக்கு சமூகமளிக்க முடியாவிட்டால் எதிர்காலத்தில் புகையிரத சேவைகளும் பாதிக்கப்படலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...