ஸ்பெயினுக்குள் நுழைய முயற்சித்த 23 பேர் பலி

ஸ்பெயினின் வட ஆபிரிக்க பகுதியான மெலிலாவுக்குள் நுழைய பெரும் எண்ணிக்கையானவர்கள் முயன்ற நிலையில் குறைந்தது 23 தஞ்சக்கோரிக்கையாளர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் எல்லை வேலியின் மேல் இருந்து விழுந்தே சிலர் உயிரிழந்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட மோதலை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...