உக்ரைனியத் தலைநகரின் பல இடங்களில் வெடிப்பு

உக்ரைன் தலைநகர் கீவ்வை பல்வேறு வெடிப்புச் சத்தங்கள் உலுக்கியுள்ளன. சுமார் 3 வாரங்களில் முதல்முறையாக அங்கு வெடிப்புச் சம்பவங்கள் நேர்ந்துள்ளன.

உள்ளூர் நேரப்படி நேற்றுக் காலை ஆறரை மணிக்கு குறைந்தது 4 வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. குறைந்தது 2 குடியிருப்புக் கட்டடங்கள் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறின. அங்கிருந்து மக்களை வெளியேற்ற மருத்துவக் குழுக்களும் அவசரகால குழுக்களும் அனுப்பப்பட்டதாய் அதிகாரிகள் கூறினர்.

யாருக்கும் உயிருடற்சேதம் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. உக்ரைன் படைகள் கடுமையாக எதிர்த்துப் போராடியதால் கீவ் மீதான தாக்குதல்களை ரஷ்யா முன்னதாகக் கைவிட்டிருந்தது. அதற்குப் பதிலாக கிழக்கிலும் தெற்கிலும் அது கூடுதல் கவனம் செலுத்தியது.


Add new comment

Or log in with...