அமெரிக்காவில் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம்

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமையை ரத்துசெய்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டங்கள் இரண்டாவது நாளாகத் தொடர்கின்றன.

கருக்கலைப்பை எதிர்ப்போரும், அதைச் செய்துகொள்ளும் உரிமையை ஆதரிப்பவர்களும் பெரும்பாலும் அமைதியான முறையில் பேரணிகளில் ஈடுபட்டனர்.

கருக்கலைப்புக்கு ஆதரவான சட்டம் சுமார் 50 ஆண்டுக்கு முன் அமெரிக்காவில் நடப்புக்கு வந்தது. அப்போதிலிருந்து அது குறித்து மக்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து 8 மாநிலங்களில் கருக்கலைப்பு உடனடியாக தடை செய்யப்பட்டது.

எதிர்வரும் வாரங்களில் இன்னும் சில மாநிலங்களில் அந்தத் தடை நடப்புக்கு வரும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓரினத் திருமணங்கள் உள்ளிட்ட மற்ற சில உரிமைகளும் குறிவைக்கப்படலாம் என்ற அக்கறைகள் எழுந்துள்ளன.


Add new comment

Or log in with...