பெலாரஸுக்கு ‘அணு ஆயுத’ ஏவுகணை வழங்குகிறது ரஷ்யா

அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

நேட்டோவின் அணு அயுத விமானங்கள் பெலாரஸ் எல்லைக்கு நெருக்கமாக வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி முறையிட்டதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகசென்கோவை மெஸ்கோவில் கடந்த சனிக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். லித்துவேனியா, போலந்து ஆகிய அண்டை நாடுகள் தனக்கு எதிராக மோதல் அணுகுமுறையைப் பின்பற்றுவதாக லுகசென்கோ அக்கறை தெரிவித்திருந்தார்.

“பலிஸ்டின் அல்லது குரூஸ் ஏவுகணையாக பயன்படுத்த முடியுமான இஷ்கந்தர்–எம் மூலோபாய ஏவுகணை அமைப்புகளின் வழக்கமான மற்றும் அணுத் திறன் கொண்ட முறைகளை பெலாரஸுக்கு எதிர்வரும் மாதங்களில் நாம் வழங்குவோம்” என்று புட்டின் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...