தென்னாபிரிக்க இரவு விடுதி: மர்மமான முறையில் உயிரிழந்த 17 பேரின் சடலங்கள்

தென்னாபிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் உள்ள இரவு விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் 17 சடலங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அறிவுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் எந்த சூழலில் உயிரிழந்துள்ளார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 மற்றும் 18 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இரவு விடுதிக்கு வெளியில் திரண்டுள்ள உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை அமைதிப்படுத்த பொலிஸார் முயற்சிக்கும் காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.

உயிரிழந்தவர்களிடம் வெளிப்படையாக எந்தக் காயமும் இல்லாத நிலையில் இதனை கத்திக்குத்து தாக்குதலாக நம்புவது கடினம் என்று கிழக்கு கேப்டவுன் மாகாண சமூக மற்றும் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரியான உனாதி பின்கோஸ் ஏ.எப்.பி செய்தி நிறுவத்துக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சடலங்கள் எந்த காயமும் இன்றி இரவு விடுதியில் தரையில் சிதிறிய நிலையில் காணப்படும் உறுதி செய்யப்படாத படங்கள் சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளன.


Add new comment

Or log in with...