- மின்சார சபையினால் 835% கட்டண அதிகரிப்புக்கு கோரிக்கை!
- 0 - 30 அலகொன்று ரூ. 2.50 இருந்து ரூ. 8.00; நிலையான கட்டணம் ரூ. 50 இருந்து ரூ. 150
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் முன்மொழிவுகளை முன்வைக்க, நாளை (28) முதல் 3 வாரங்களுக்கு பொதுமக்களுக்கு அவகாசம் வழங்கப்படுவதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று (27) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.
மின்சார சபையினால் தற்போது மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் முன்மொழிந்துள்ள கட்டண அதிகரிப்பை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)
அதற்கமைய குறித்த விடயம் தொடர்பான தமது யோசனைகளை எழுத்து மூலம் முன்வைக்குமாறு அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மின்சார சபையினல் 835% மின் கட்டண அதிகரிப்பு கோரப்பட்டுள்ளதாகவும், அதனை ஏற்க முடியாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் 0 - 30 அலகுகளுக்கு உட்பட்ட கட்டண பட்டியலுக்கு அலகொன்று ரூ. 2.50 இலிருந்து ரூ. 8.00 ஆக அதிகரிக்கவும், நிலையான கட்டணத்தை ரூ. 50 இருந்து ரூ. 150 ஆக அதிகரிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Add new comment