காங்கேசன்துறை - தமிழ் நாடு இடையே சரக்குக் கப்பல் சேவை

- பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது: டக்ளஸ்

இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு கப்பல் சேவையை முன்னெடுப்பது தொடர்பான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளதாக, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பாண்டிச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு மிக விரைவில் சரக்குகளை பரிமாறிக் கொள்ள முடியுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் சேவை மூலம் மக்களுக்கு அவசியமான எரிபொருட்கள், உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் போன்ற பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிகாகட்டியுள்ளார்.

இதேவேளை, ஏற்கனவேவ திட்டமிட்டபடி, எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதியிலிருந்து, பலாலி விமான நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் சென்னை நகரங்களுக்கிடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அவர் இதன்போது தெரிவித்தார்.


Add new comment

Or log in with...