புதிய BA.5 கொவிட் திரிபு தொடர்பில் எச்சரிக்கை

- இன்னும் கொவிட் தொற்று எச்சரிக்கை நிலவுகிறது

புதிதாக கண்டறியப்பட்டள்ள கொவிட் தொற்றின் BA.5 திரிபானது இதுவரை கண்டறியப்பட்ட கொவிட் வைரஸ் திரிபுகளில் மிகவும் பரவக்கூடியதும் நோயெதிர்ப்பை தவிர்க்கக்கூடிய பரம்பரையாகுமென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாம் அனைவரும் வேறு திசையில் எமது கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், கொவிட் தொற்று உலகில் இன்னும் இருந்து கொண்டுதான் இருப்பதாக தெரிவிதுள்ள அவர், BA5 வைரஸ் திரிபானது  லேசுபட்ட ஒன்று அல்ல எனவும் இது 63 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது BA.4 இனை ஒத்த புரதப் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது எனவும், வைரஸின் ஏனைய பகுதிகளில் உள்ள பல பிறழ்வுகள், உடலத்திற்கு ஆபத்தாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் இலங்கையில் அது (BA5) இதுவரை கண்டறியப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...