வரிசையில் காத்திருந்த மக்களுக்கு உணவளிப்பு

நெகிழ வைத்த எரிபொருள் நிலைய உரிமையாளர்

இங்கிரிய பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த மக்களை எரிபொருள் நிலைய உரிமையாளர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பல நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இரவு பகலாக உணவு வழங்குவதற்கு எரிபொருள் நிலைய உரிமையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இங்கிரிய உறுகல எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் கெலும் பிரசன்ன மற்றும் அவரது குழுவினர் அனைவரும் ஆற்றிய பணியை பொது மக்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...