ஜேர்மனியில் பங்கீடு முறையில் எரிவாயு

ஜேர்மனிக்கு எரிபொருள் விநியோகத்தை ரஷ்யா குறைத்துவிட்டதால் அங்கு எரிவாயுவை பங்கீடு முறையில் வழங்க அந்த நாடு தயாராகி வருகிறது.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷ்யா குறைத்தது. இதனால், எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவை சார்ந்துள்ள ஜேர்மனி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிலைமையை சமாளிக்க பல்வேறு கட்ட அவசர நிலைகளை அறிவித்து வந்த அந்த நாடு, ‘எச்சரிக்கை’ கட்ட அவசர நிலையை கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. இது, எரிவாயு பங்கீடு முறையில் விநியோகிப்பதற்கு முந்தைய கட்டம் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு எதிராக எரிவாயுவை ரஷ்யா ஆயுதமாக பயன்படுத்துவதாக ஜேர்மனி பொருளாதார அமைச்சர் ரொபர்ட் ஹபெக் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...