கனகநாயகம் தேசிய பாடசாலை சதுரங்க விளையாட்டு சுற்றுப் போட்டியில் சாதனை

இரத்தினபுரி மாவட்டத்தின் பாடசாலை கிடையிலான சதுரங்க விளையாட்டு சுற்றுப்போட்டியில் பலாங்கொடை கனகநாயகம் தேசிய பாடசாலையின் செல்வி கிருஷாந்தினி மாணவி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18-19 ஆகிய திகதிகளில் இரத்தினபுரி படுஹேன தேசிய பாடசாலையில் இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சதுரங்க சுற்றுப்போட்டியில் பலாங்கொடை கனகநாயகம் தேசிய பாடசாலையில் இருந்து 29 மாணவர்கள் பங்குகொண்டனர்.

முதற்தடவையாக எமது மாணவர்கள் இந்த சதுரங்க விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய போதிலும் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது எமது பாடசாலையின் ஒரு சாதனையாகும் என அதிபர் தெரிவித்தார்.

இம் மாணவர்களை சரியாக வழி நடத்தி தேசிய மட்டத்திற்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த பயிற்சி ஆசிரியர் அகில் அவர்களை பாடசாலை நிர்வாகம் நன்றியுடன் பாராட்டுகிறது.

பலாங்கொடை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...