அதிகாலை 2.00 மணிக்கு அதிகரித்த எரிபொருள் விலைகள்

- மண்ணெண்ணெய் விலை மாற்றமில்லை; லீற்றருக்கு ரூ. 334.39 நஷ்டம்

இன்று (26) அதிகாலை 2.00 முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) மற்றும் இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (LIOC) ஆகியவற்றினால் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பெற்றோல்
ஒக்டேன் 92: ரூ. 420 இருந்து ரூ. 470 (ரூ. 50 ஆல்)
ஒக்டேன் 95: ரூ. 450 இருந்து ரூ. 550 (ரூ. 100 ஆல்)

டீசல்
ஒட்டோ டீசல்: ரூ. 400 இருந்து ரூ. 460 (ரூ. 60 ஆல்)
சுப்பர் டீசல்: ரூ. 445 இருந்து ரூ. 520 (ரூ. 75 ஆல்)

அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா ஐஓசி (LIOC) நிறுவனமும் இன்று (26) முதல் அதே அதிகரிப்பின் அடிப்படையில் விலைகளை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

<<< இறுதியாக CEYPETCO/LIOC மேற்கொண்ட எரிபொருள் விலை அதிகரிப்பு விபரம் >>>

பெற்றோல்
ஒக்டேன் 92: ரூ. 338 இருந்து ரூ. 420 (ரூ. 82 ஆல்)
ஒக்டேன் 95: ரூ. 373 இருந்து ரூ. 450 (ரூ. 77 ஆல்)

 

டீசல்
ஒட்டோ டீசல்: ரூ. 289 இருந்து ரூ. 400 (ரூ. 111 ஆல்)
சுப்பர் டீசல்: ரூ. 329 இருந்து ரூ. 445 (ரூ. 116 ஆல்)

குறித்த விலை அதிகரிப்புகள், எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணெய் லீற்றருக்கு ரூ. 334.39 நஷ்டம்
இதேவேளை, அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள, எரிபொருட்களுக்கான செலவுகளின் பட்டியலுக்கமைய மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்கப்படாமை காரணமாக, அதற்கான மொத்த செலவு ரூ. 421.39 ஆக இருக்கின்ற நிலையில், தற்போதைய விலையின் (ரூ. 87) அடிப்படையில் ஒரு லீற்றருக்கு ரூ. 334.39 நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேற்கொண்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பானது தங்களுக்கு சுமைக்கு மேல் சுமையென பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் கொள்வனவு/ விற்பனையின் அடிப்படையில் இலாபம்/ நஷ்டம் (பட்டியல் இணைப்பு)
பெற்றோல்:
- ஒக்டேன் 92: ரூ. 15.57 (இலாபம்)
- ஒக்டேன் 95: ரூ. 68.61 (இலாபம்)

டீசல்:
- ஒட்டோ டீசல்: ரூ. 8.52 (நஷ்டம்)
- சுப்பர் டீசல்: ரூ. 20.27 (இலாபம்)

மண்ணெண்ணெய்: ரூ. 334.39 (நஷ்டம்)


Add new comment

Or log in with...