ஜோன்ஸ்டன் MP யிடம் 4 மணிநேர வாக்குமூலம்

மே 09 காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அரசாங்க ஆதரவாளர்களின் தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவிடம் சி.ஐ.டி.யினர் நேற்று (24) நான்கு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸ் அத்தியட்சகர் ஜயதிலக தலைமையிலான குழுவினர் அவரிடம் விசாரணைகளை நடத்தியதாக குற்றப் புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.

நேற்று முற்பகல் 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்ற ஜோன்ஸ்டன் பெனாண்டோவிடம் நண்பகல் 1.00 மணி வரையிலும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், இதன்போது அலரி மாளிகையில் தான் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம் எனக் கூறி ஒரு இறுவெட்டையும் ஜோன்ஸ்டன் பெரனாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் கையளித்ததாகவும் அறிய முடிகிறது.


Add new comment

Or log in with...