மாணவர் விசாவுக்கான விண்ணப்பங்களை விரைவாக சமர்ப்பிக்கவும்

பிரிட்டனுக்கான மாணவர் விசா விண்ணப்பங்களை துரிதமாக சமர்ப்பிக்குமாறு கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் தமது விசாவுக்கான விண்ணப்பங்களை துரிதமாக சமர்ப்பிக்குமாறு பரிந்துரைப்பதாகவும் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு முடிவுகள் வெளியாக 05 வாரங்கள் செல்லும் என்பதே இதற்குக் காரணமென பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அதிகளவிலான விண்ணப்பங்கள் கிடைப்பதாகவும் எனவே உடனடியாக விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஆரம்பிக்குமாறும் பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் இலங்கை மாணவர்களிடம் கோரியுள்ளது.

 


Add new comment

Or log in with...