அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப் பகிர்வு

இத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் வெளியாகி தலா ஐம்பதாயிரம் ரூபா பரிசு பெற்ற நான்கு நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி இன்று 25 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் நடைபெறுகின்றது.

எழுத்தாளர் காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் எழுதிய மைவண்ணன் இராம காவியம் (கவிதை) நூல் பற்றிய வாசிப்பு அனுபவத்தை அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் வாசகி திருமதி விஜி இராமச்சந்திரனும், எழுத்தாளர்

கே. ஆர். டேவிட் எழுதிய ‘கே. ஆர். டேவிட் சிறுகதைகள்’ நூல் பற்றிய வாசிப்பு அனுபவத்தை அவுஸ்திரேலியா பிறிஸ்பேர்னில் வதியும் எழுத்தாளர் திருமதி தாமரைச்செல்வியும், எழுத்தாளர் சீமான் பத்திநாதன் பர்ணாந்து எழுதிய ‘குஞ்சரம் ஊர்ந்தோர்’ (நாவல்) பற்றிய வாசிப்பு அனுபவத்தை கிளிநொச்சியில் வதியும் எழுத்தாளர் கருணாகரனும், எழுத்தாளர் எம். வாமதேவன் எழுதிய ‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ (கட்டுரை) நூல் பற்றிய வாசிப்பு அனுபவத்தை கொழும்பிலிருந்து எழுத்தாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மல்லியப்பு திலகரும் சமர்ப்பித்து உரையாற்றுவர்.

இந்த மெய்நிகர் நிகழ்வில் இணைந்து கொள்ளுமாறு எழுத்தாளர்களும் கலை, இலக்கியவாதிகளும் வாசகர்களும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : லெ. முருகபூபதி

நேரம்: அவுஸ்திரேலியா: இரவு 7-00 மணி, இலங்கை – இந்தியா: மாலை 2-30 மணி, இங்கிலாந்து: முற்பகல் 10 – 00 மணி, ஐரோப்பா: முற்பகல் 11.00 மணி, நியூசிலாந்து: இரவு 9-00 மணி

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88435805663?pwd=OS9tNTh6MTVaWXFtOCtaRnpBNms0UT09
Meeting ID: 884 3580 5663
Passcode: 353292

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் நூல்களுக்கு பரிசளிக்கும் திட்டத்தினை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

தகவல்: லெ. முருகபூபதி


Add new comment

Or log in with...