அமெரிக்கா, இந்தியாவின் பெரும் வர்த்தக கூட்டாளி

சீனாவை விஞ்சி இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா உருவெடுத்திருப்பதை புதிய தரவுகள் காட்டுவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 119.4 பில்லியன் டொலரைத் தொட்டுள்ளது.

இந்த சாதனை தரவுகளின்படி, அமெரிக்காவுக்கான இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டில் 51.62 பில்லியன் டொலரிலிருந்து 76.11 பில்லியன் டொலர்களாக அதிகரித்திருப்பதோடு இறக்குமதிகள் 29 பில்லியன் டொலரில் இருந்து 43.31 பில்லியன் டொலர் வரை உயர்ந்துள்ளது.


Add new comment

Or log in with...