ஐரோப்பாவுக்கு எரிவாயு: ரஷ்யா முழுமையாக நிறுத்தும் அச்சம்

உக்ரைன் நெருக்கடியில் தனது அரசியல் செல்வாக்கை பலப்படுத்த ஐரோப்பாவுக்கான எரிவாயுவை ரஷ்யா முழுமையாக நிறுத்தக் கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு உக்ரைன் இப்போதே தயாராக வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.

“ரஷ்யா தொடர்ந்து அங்கும் இங்கும் பல்வேறு சிக்கல்களைக் கண்டறிவதையும், ஐரோப்பாவுக்கு எரிவாயு விநியோகத்தை மேலும் குறைப்பதற்கான சாக்குகளைத் தொடர்ந்து தேடுவதையும் மறுக்க முடியாது. சிலவேளை அதனை முழுமையாக நிறுத்தக் கூடும்” என்று சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பாதிஹ் பிரோல் கடந்த புதனன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தக் காரணத்தால் ஐரோப்பாவுக்கு அவசரநிலை திட்டங்கள் தேவைப்படும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் நிலக்கரிக்கு தடை விதித்தபோதும் எரிவாயு இறக்குமதியை நிறுத்தவில்லை. ரஷ்ய எரிவாயுவில் ஐரோப்பா பெரிதும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...