குமார வெல்கம இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து விடுதலை

முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த வேளையில், இலங்கை போக்குவரத்து சபையில், இல்லாத பதவியான பிரதித் தலைவர் எனும் பதவியை உருவாக்கி சம்பளம் வழங்கியதன் மூலம், அரசாங்கத்திற்கு சுமார் ரூ. 3 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக, அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்த குறித்த வழக்கு, இன்று (24) கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் அவரை குறித்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


Add new comment

Or log in with...