குறைந்த விலையில் பயோ டீசல் மற்றும் பெற்றோல்!

- யாழில் ஆய்வுகூட உதவியாளர் விளக்கம்

இலகுவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பயோ பெற்றோல் மற்றும் பயோ டீசல் என்பவற்றை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆய்வு கூட உதவியாளர் தெரிவித்துள்ளார்.

நவாலியினை சேர்ந்த செல்வராசா சுரேஸ்குமார் நேற்றுமுன்தினம் அதற்கான செய்முறை விளக்கத்தினை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், சாம்பல் போன்ற இலங்கையில் இலகுவாக கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து பயோ டீசலினை இலகுவாக தயாரிக்க முடியும்.

அதேபோன்று நீர் மற்றும் சிரட்டைக்கரி போன்ற காபன் வகைகளை பயன்படுத்தி பயோ பெற்றோலை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான தயாரிப்பு மாதிரி செய்முறை விளக்கமும் அவரால் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது.

பயோ டீசலினை சாதாரணமாக வீட்டிலேயே செய்ய முடியும் எனவும், பயோ பெற்றோல் தயாரிப்பதற்கு சுமார் 50 மில்லியன் முதலீடு தேவைப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இதற்கு அனுசரணையாளர்களும், அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில் சூழலுக்கு பாதிப்பில்லாத எரிபொருளை மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்து எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...