பங்களாதேஷில் கனமழை பெரு வெள்ளம்; 32 பேர் பலி

பங்களாதேஷின் சுனம்கஞ்ச் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு நிவாரணம் பெற வரிசையில் நிற்கின்றனர்.... (படம்: AFP - Md Abu Sufian)

- 3 இலட்சம் பேர் இடம்பெயர்வு; 40 இலட்சம் பேர் பாதிப்பு

பங்களாதேஷில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக குறைந்தது 32 பேர் பலியாகியுள்ளதோடு, மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

சுமார் 300,000 மக்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்குள்ளாகி தங்கள் வீடுகளுக்கு அருகில் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷின் வடகிழக்கு பிராந்தியத்திலேயே இவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஹெலிகொப்டர் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளார். அவசியமான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...