பிரான்ஸில் ‘புர்கினி’ ஆடைத் தடை உறுதி

பிரான்ஸில் பொது நீச்சல் தடாகங்களில் முழு உடலையும் மறைக்கும் ‘புர்கினி’ நீச்சல் உடைக்கான தடையை அந்நாட்டு உச்ச நிர்வாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தடைக்கு எதிராக கிரனோபல் நகரில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது.

புர்கினி உட்பட அனைத்து நீச்சல் உடைகளையும் கிரனோபல் நகர் கடந்த மாதம் அங்கீகரித்தது, அரசின் தடைக்கு எதிரானதாக அமைந்தது. புர்கினி நீச்சல் உடை பெரும்பாலும் முஸ்லிம் பெண்களால் அணியப்படுகிறது. ‘எனினும் மத நிபந்தனைகளை திருப்திப்படுத்துவதற்கு சட்டங்களில் விலக்குகளை அனுமதிக்க முடியாது’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பிரான்ஸ் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்களின் பர்தா உட்பட மத அடையாளங்களை அணிவதற்கு 2004 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதேபோன்று நிகாப் என அழைக்கப்படும் முகத்தை மறைக்கு ஆடைகளை பொது இடங்களில் அணிவதற்கும் பிரான்ஸ் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...