உலகின் பெரும் செல்வந்தர் இலோன் மஸ்க் உடனான உறவை முறித்துக்கொள்ள விரும்புவதாக கூறிய அவரது திருநங்கை மகள், தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
டெஸ்லா நிறுவன உரிமையாளரான மஸ்கிற்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க். தந்தை மஸ்க் உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க விரும்புவதாக கூறியுள்ள அவர், தனது பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்றக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், தனது பாலினத்தை ஆண்பாலில் இருந்து பெண்பாலாக மாற்றி புதிய சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
“எனது தந்தையுடன் எந்த வழியிலும், வடிவத்திலும் அல்லது வகையிலும் வாழ விரும்பவில்லை அல்லது தொடர்பு கொள்ள விரும்பவில்லை” என்று நீதிமன்றத்திற்கு அளித்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
பெரியவர் என்று சட்டரீதியாக அங்கீகரிக்கப்படும் 18 வயது பூர்த்தியான அடுத்த தினத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
50 வயதான மஸ்க் எட்டுக் குழந்தைகளின் தந்தை என்பதோடு ஒரு குழந்தை பிறந்த விரைவில் உயிரிழந்தது.
Add new comment