கலினின்கிரேட் வட்டாரத்துக்கான ரயில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று லித்துவேனியாவை ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையின் காரணமாக, அந்த ரயில் பாதையை மூடியதாக லித்துவேனியா கூறுகிறது.
சினமூட்டும் அந்தச் செயலுக்கு, ரஷ்யா, கட்டாயம் பதிலடி தரும் என்று அந்நாட்டின் மூத்த பாதுகாப்பு அதிகாரி கூறினார்.
ரஷ்யாவின் பல்டிக் கடற்படைத் தலைமையகமான கலி - நிங்ராட், கேந்திர -முக்கியத்துவம் வாய்ந்த வட்டாரமாக உள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அந்த வட்டாரத்தை ஜெர்மனியிடம் இருந்து ரஷ்யா எடுத்துக் கொண்டது. நேட்டோ உறுப்பு நாடுகளான போலந்து, லித்துவேனியாவை ஒட்டியுள்ள அந்த வட்டாரத்துக்கு, ரஷ்யாவோடு நில எல்லை இல்லை.
சுமார் ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் அந்த வட்டாரத்தின் தொழில்துறை, இறக்குமதிப் பொருட்களைப் பெரிதும் சார்ந்துள்ளது. இந்நிலையில் ரயில் பாதை மூடப்பட்டிருப்பது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கலினின்கிரேட் வட்டாரத்தின் 50 வீதமான பொருட்களுக்கு இந்தத் தடை பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அந்த பிராந்திய ஆளுநர் அன்டன் அலிகானொவ் குறிப்பிட்டுள்ளார்.
Add new comment