பாடசாலைகளுக்கிடையிலான டயலொக் ரக்பி லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்

கொவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடகால இடைவெளியின் பின்னர், இலங்கையின் 'ப்ளூ-ரிப்பன்' போட்டியான 'டயலொக் ஸ்கூல்ஸ் ரக்பி லீக்- 2022' போட்டிகள் இன்று ஜூன் 23 ஆம் திகதி ஆரம்பமாககின்றன.அதன்படி கொழும்பு புனித ஜோசப் கல்லூரி, கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி ஆகிய கல்லூரிகள் இன்று 23 ஆம் திகதியன்று ஹெவ்லொக் விளையாட்டுக் கழகத்தில் நடைபெறும் பிரிவு1 இல் ஏ பிரிவிற்கான தொடக்க ஆட்டத்தில் போட்டியிடவுள்ளன.

டயலொக் 'ஸ்கூல்ஸ் ரக்பி லீக் 2022' தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற பிரிவு 1இன் ஏ பிரிவு போட்டிகள், நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைகளின் காரணமாக குறுகிய காலத்திற்கு வரையறுக்கப்பட்டுள்ளமைக்கு ஏற்ப முதல் 12 அணிகள் 34 போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளன. இதனையடுத்து, எட்டு வாரங்களின் பின்னர் டயலொக் ஸ்கூல்ஸ் ரக்பி நொக்கவுட் போட்டிகள் இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டின் கீழ் மீண்டும் தொடர்ந்து நடைபெறும்.

டயலொக் ஸ்கூல்ஸ் ரக்பி லீக் 2022 இன் பிரிவு 1 இன் ஏ போட்டிகளில் கொழும்பு- ரோயல் கல்லூரி, கொழும்பு- புனித பீட்டர்ஸ் கல்லூரி, கொழும்பு- புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி, கல்கிசை புனித தோமஸ் கல்லாரி, கொழும்பு -இஸிப்பத்தான கல்லூரி, கண்டி டிரினிட்டி கல்லூரி, கல்கிசை -விஞ்ஞானக் கல்லூரி, கண்டி, கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி வித்யார்த்த கல்லூரி, கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் கண்டி தர்மராஜ கல்லூரி ஆகியன கலந்து கொள்ளவுள்ளதுடன், மேலும் 24 க்கும் அதிகளவான பாடசாலைகள் பிரிவு 1 இல் பிரிவு பி மற்றும் சி பிரிவுகளின் கீழ் போட்டியிடவுள்ள அதே வேளை, மேலும் 40 பாடசாலைகள் பிரிவு 2 மற்றும் பிரிவு 3 ஆகியவற்றில் போட்டியிடவுள்ளன.

2019 ஆம் வருடம் உட்பட கடந்த மூன்று பருவங்களில் செம்பியனாகிய கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு புனித பீற்றஸ் கல்லூரி, கல்கிசை புனித தோமஸ் கல்லூரி மற்றும் கண்டி டிரினிட்டி கல்லூரியுடன் இணைந்து சிறந்த போட்டியாளர்களுள் ஓர் அணியாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

“பாடசாலை விளையாட்டுக்களுக்கான கால அட்டவணையில் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாகிய டயலொக் ஸ்கூல்ஸ் ரக்பி லீக் மற்றும் நொக்கவுட் போட்டிகளின் 2022 வருடத்திற்கான போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தையிட்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்” என டயலொக் ஆசி ஆட்டா நிறுவனத்தின் வர்த்தக மற்றும் ஊடக பிரிவின் சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் தெரிவித்த்தார்.


Add new comment

Or log in with...