'AFC Helping Hand': 2021/2022 இல் 55 திட்டங்களை நிறைவு செய்துள்ள Alliance Finance

இலங்கையின் மிகப் பழமையான நிதி நிறுவனமான Alliance Finance Co. PLC (AFC), அதன் 'AFC Helping Hand' நிலைபேறான தன்மை செயற்பாட்டின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருந்தது. அனைத்து இலங்கையர்களினதும், குறிப்பாக கொவிட்-19 தொற்றுநோயின் பாதிப்பினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன், அதன் பரந்த கிளை வலையமைப்பின் மூலம் நிலைபேறான தன்மையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த முயற்சியின் கீழ் AFC நிர்வாகமானது, அவர்களோடு இணைந்து வாழும் சமூகத்திற்கு உதவுவதற்காக, தங்கள் கிளையின் எல்லைக்குட்பட்ட சமூகத்திற்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, நிறுவனம் அதன் கிளை வலையமைப்பிற்கு அறிவுறுத்தியிருந்தது. கிளை முகாமையாளர்கள் மற்றும் அந்தந்த பிராந்திய தலைவர்கள் உள்ளிட்ட AFC கிளை ஊழியர்களால் இந்த முயற்சிகள் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இதற்காக முன்வைக்கப்பட்ட பயனுள்ள பல முன்மொழிவுகளில் சிறந்த திட்டங்களை தொடர அனுமதி வழங்கப்பட்டதோடு, அதற்கு அவசியமான நிதியும் வழங்கப்பட்டது.

கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், 'AFC Helping Hand' சமூக நலத் திட்டம் ஊடாக நாடு முழுவதும் 55 திட்டங்களை செயற்படுத்த, AFC கிளை வலையமைப்பினால் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பாடசாலைகள், மருத்துவமனைகள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் கொவிட்-19 பராமரிப்பு மையங்கள் உள்ளிட்டவைளுக்கு மருத்துவ உபகரணங்கள், கணனி உபகரணங்கள், நீர் தொட்டிகள், விளையாட்டு மைதான சாதனங்கள், கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இதன் போது நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

Alliance Finance நிறுவனத்தின் பிரதித் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரொமானி டி சில்வா இம்முயற்சிகள் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட போது, "எமது கிளை வலையமைப்புகள் அவர்களைச் சூழ்ந்து வாழும் சமூகங்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பான இந்த முயற்சிகளின் பின்னால் அணிவகுப்பதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். AFC எப்பொழுதும் சமூகத்திற்குத் நன்றிக்கடன் செலுத்த பாடுபடும் ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது. அத்துடன் நாடு முழுவதும் இத்திட்டங்கள் நடாத்தப்படுவதானது, உணர்வுபூர்வமானதாக அமைந்துள்ளது. இந்த பெறுமதிமிக்க முயற்சியின் கீழ், 4 மில்லியன் ரூபா நிதியில்  55 வேலைத்திட்டங்களை இவ்வருடம் பூர்த்தி செய்துள்ளோம்." என்றார்.

AFC எப்போதுமே அது சேவை வழங்கும் சமூகங்களின் சமூக மற்றும் சூழல் நலன் தொடர்பில் விழிப்புடன் இருப்பதால், நிறுவனமானது 2012 இல், சமூகம், சூழல், நிதி ஆகிய மூன்று அடிப்படை அம்ச (triple bottom line) வணிகத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு அதை முறையாக தங்கள் வணிகத்தில் ஒருங்கிணைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, AFC இன் வணிகம் பாரிய அளவில் மேலும் மேம்பாடு அடைந்நது. அதற்கு காரணம், அவர்கள் தங்கள் வணிக மாதிரியில் நிலைபேறான தன்மை கொள்கைகளையும் ஒருங்கிணைத்திருந்தனர். இதன் மூலம், நிறுவனம் கவனம் செலுத்துகின்ற, சூழல் மற்றும் சமூக திட்டங்களை உருவாக்கவும், நிலைபேறான முதலீடுகளைச் செய்யவும் வழிவகுத்ததுடன், ஒரே எண்ணம் கொண்ட பங்குதாரர்களுடன் கூட்டாண்மை மூலம் அதன் வலையமைப்பை வலுப்படுத்தவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

AFC, வருடாந்தம் அதன் இலாபத்தில் 3% - 4% யினை, சமூக மற்றும் சூழல் நிலைபேறான தன்மை முயற்சிகளில் பல வருடங்களாக முதலீடு செய்து வருகின்றது. சூழலுக்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் முயற்சிகளில், 2020/21 நிதியாண்டில் AFC இன் நிலைபேறான தன்மை முயற்சிகள் மீதான முதலீடு ரூ. 12 மில்லியனுக்கும் அதிகமாக அமைந்திருந்ததுடன், 2022/2023 நிதியாண்டில் மேலும் ரூ. 80 மில்லியனாக அதனை அதிகரிக்க நிறுவுனம் உறுதி வழங்கியுள்ளது. சூழல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் மற்றும் தேசிய ரீதியான சமூக முன்னுரிமைகளுக்கு பங்களிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள AFC எப்போதும் முன்னிற்கிறது.

Alliance Finance PLC பற்றி
அலையன்ஸ் பினான்ஸ் நிறுவனமானது, விருது அளிக்கப்பட்ட, அனுமதிப்பத்திரம் கொண்ட இலங்கையிலுள்ள நிதி நிறுவனமாகும். இது 65 ஆண்டுகளுக்கும் மேலாக நிதித் துறையில் இயங்கி வருவதுடன், நான்கு தலைமுறை விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து, நிதி உள்ளடக்கம் மற்றும் நிலைபேறான தன்மையை ஆதரிக்கிறது. AFC தனது வாடிக்கையாளர்களின் வளர்ச்சி மற்றும் செழிப்பை வளர்க்கும் அதே வேளையில் அவர்களுடன் நம்பிக்கை மற்றும் நீண்டகால உறவுகளை வளர்ப்பதற்கான ஒரு பரஸ்பர பார்வையை கொண்டுள்ளது. சூழல் மற்றும் நிலைபேறான தன்மை முன்முயற்சிகள் ஆகியன AFC இன் பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) நிகழ்ச்சி நிரலின் பிரதான இடத்தை வகிக்கின்றன. இது  'triple bottom line' அணுகுமுறையை நோக்கி நிறுவனத்தை உத்வேகம் அடையச் செய்கின்றது.


Add new comment

Or log in with...