வாகன உதிரிப்பாகம் எனும் போர்வையில் சொகுசு கார்கள் இறக்குமதி

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து சொகுசு வாகனங்களை சுங்க திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

கைப்பற்றப்பட்ட வாகனங்களில் BMW, Mercedez, Audi வகை கார்கள் உள்ளடங்குவதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்தில் (UK) இருந்து உதிரிப் பாகங்கள் என்ற போர்வையில் இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருகொடவத்தையில் அமைந்துள்ள கொள்கலன் களஞ்சியசாலையில் இருந்து இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த வாகனங்களிலிருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டவாறும், Airbag வெளியில் வந்த நிலையிலும் காணப்படுகின்றது. அவை பயன்படுத்தப்பட்ட கார்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை, வத்தளையில் உள்ள கொள்கலன் களஞ்சியத்தில் வைத்து, இரண்டு கொள்கலன்களில் இருந்த இறக்குமதிக்கு தடைசெய்யப்பட்ட ரூ. 5 கோடிக்கும் அதிக, (40,000 டொலர்) பெறுமதியான பொருட்களை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

2,500 மதுபான போத்தல்கள், என்ஜின் எண்ணெய், அழகு சாதனப் பொருட்கள், மஞ்சள், லைட்டர்கள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு கைப்பறப்பட்டுள்ளதாக,  சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...