தபால் பொதிக்குள் இருந்து போதை மாத்திரைகள் கண்டுபிடிப்பு

13கோடி ரூபா பெறுமதி

நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட 13கோடி 64இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளை நேற்று (22) இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றினர். 

மெதம்பிடமின் எக்ஸ்டசி எனப்படும் 13,640போதை மாத்திரைகள் இவ்வாறு சுங்கத்தின் தபால் மதிப்பீட்டு திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டது. 

நெதர்லாந்திலிருந்து அனுப்பப்பட்ட இந்த சந்தேகத்துக்கிடமான பொதியை சுங்க தபால் மதிப்பீட்டுத் திணைக்களம் பரிசோதனை செய்தபோது அந்தப் பொதிகளில் படுக்கை விரிப்பில் சுற்றப்பட்டிருந்த இந்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

தபால் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன்  சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் இணைந்து போதை மாத்திரைகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

மாத்திரைகள் மேலதிக ஆய்வுக்காக பொலிஸ் போதை ஒழிப்பு பணியகத்துக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி சுங்க பணிப்பாளர் உப்புல் த சில்வா தெரிவித்தார். சுங்க அத்தியட்சகர் சாந்தினி செனவிரத்ன உள்ளிட்ட சுங்க அதிகாரிகள் பரிசோதனையை மேற்கொண்டனர்.


Add new comment

Or log in with...