Thursday, June 23, 2022 - 6:00am
வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள வாகனங்கள் சேர்விஸ் மேற்கொள்ளும் நிலைய வளாக கிணற்றிலிருந்து நேற்று (22) காலை ஆண் ஒருவரின் சடலத்தை நெளுக்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியேறிய அந் நபர் நேற்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Add new comment