ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டு; நீர்வேலியில் சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் நாளை 24.06.2022 மாலை 5.00 மணிக்கு நடைபெறும். சிறப்புச்சொற்பொழிவினை சைவப்புலவர் சி.கா.கமலநாதன் 'திருவாசகம் என்னும் தேன்' என்னும் விடயப்பொருளில் நிகழ்த்துவார்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் 'வாராந்தச் சொற்பொழிவும் - மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்' நடைபெற்று வருகின்றன.

26 ஆவது சொற்பொழிவு நாளை வெள்ளிக்கிழமை மாலை 03.30 மணிக்கு இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி அகல்ஜா ஜனார்த்தனன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

'சைவ சமய மறுமலச்சியின் தந்தை நாவலர்' எனும் தொனிப்பொருளில் சைவப்புலவர் செ. கந்த. சத்தியதாசன் சொற்பொழிவு ஆற்றுவார். அதனைத் தொடர்ந்து சொற்பொழிவிலிருந்து வினாக்கள் தொடுக்கப்பட்டு மாணவர்களுக்கான பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

சேக்கிழார் பெருமான் குருபூஜை நிகழ்வு திக்கம் கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 26.06.2022 காலை 09.00 மணிக்கு இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி கிருஷ்ணகுமாரி சிவானந்தன் தலைமையில் இடம்பெறும்.

'சேக்கிழாரின் பணி சைவத்தின் நிலைப்பு' எனும் தொனிப்பொருளில் இளம்சைவப்புலவர் நித்தியபாபுதரன் சொற்பொழிவு நிகழ்த்துவார். மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. பொலிகை விநாயகர் அறநெறி பாடசாலை, திக்கம் மடத்துவாசல் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை, மருதாம்புலம் பத்திரகாளி அம்பாள் அறநெறிப் பாடசாலை ஆகியன் பங்கேற்கவுள்ளன.

அ.கனகசூரியர்...


Add new comment

Or log in with...