இயங்க முடியாத நிலையில் வடக்கு, கிழக்கில் சில வைத்தியசாலைகள்

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.  ஶ்ரீதரன்

வடக்கு கிழக்கில் உள்ள பல வைத்தியசாலைகள் இயங்க முடியாத நிலையில் உள்ளன. இப்பகுதிகளில் தாதியர் மற்றும் வைத்தியர் தட்டுப்பாடு காணப்படுகிறது. விகிதாசார அடிப்படையிலாவது கருத்திற் கொண்டிருந்தால் வடக்கு கிழக்கில் தமிழ் தாதியர்களை நியமிப்பதில் இடையூறு ஏற்படாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஶ்ரீதரன் தெரிவித்தார். 

ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர், வரிசையில் இது வரை 9பேர் வரை உயிரிழந்துள்ளனர். விசர்நாய்க்கடி மருந்தில்லாததால் யாழில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். பல்வேறுபட்ட இடங்களில் இந்தக் குறைபாடு காணப்படுகிறது. பாம்புக்கடிக்கான தட்டுப்பாடும் காணப்படுகிறது. அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு என்பன சரியான போக்குவரத்து இல்லாத தீவுகளாகும். படகு சேவைகள் தடைப்பட்டுள்ளன. அந்த மக்களுக்கு அவசர அம்பியுலன்ஸ் கிடையாது. தீவகப் பகுதியில் உள்ள மக்கள் வாழ முடியாது இடம்பெயர்ந்து வருகின்றனர். தீவகப் பகுதிகளில் வாழும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். படகு அம்பியூலன்ஸ் சேவை வழங்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கில் உள்ள பல வைத்தியசாலைகள் இயங்க முடியாத நிலையில் உள்ளன. இப்பகுதிகளில் தாதியர் மற்றும் வைத்தியர் தட்டுப்பாடு காணப்படுகிறது. தாதியர் நியமனத்தின் போது ஆண் தாதியர்கள் 5வீதமானர்வர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்படுகிறது. விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 22ஆக உள்ளதால் வடக்கு, கிழக்கில் உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. சிங்கள பகுதிகளில் இருந்து தான் எமது பிரதேசங்களுக்கு நியமிக்கப்படுகின்றனர். 50பேர் நியமிக்கப்படும் போது கூடுதலானவர்கள் இடமாற்றப்படுகின்றனர். அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும். மொழி தெரியாமல் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். வடக்கில் மொழிப் பிரச்சினை பெரிதளவில் காணப்படுகிறது. மொழிகளுக்கு உரிமை இருந்தும் அவை செயற்படுத்தப்படுவதில்லை. 

விகிதாசார அடிப்படையிலாவது கருத்திற் கொண்டிருந்தால் வடக்கு கிழக்கில் தமிழ் தாதியர்களை நியமிப்பதில் இடையூறு ஏற்படாது. 

வட்டக்கச்சி வைத்தியசாலைக்கு ஒரு வருடமாக வைத்தியர் இருக்கவில்லை. சிங்கள மொழி வைத்தியர் ஒருவர் தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் சேவை குறித்து மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். புலம்பெயர் நாடுகளில் இருப்போர் வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளுக்கு மருந்துப் பொருட்களை அன்பளித்து வருகின்றனர். ஏனைய பகுதிகளுக்கும் அன்பளிக்க அவர்கள் தயாராக உள்ளனர்.  இயங்க முடியாத நிலையில் வடக்கு கிழக்கில்  சில வைத்தியசாலைகள்


Add new comment

Or log in with...