டிக்கோயா தரவளை கீழ்பிரிவு தோட்ட குடியிருப்பில் தீ

04வீடுகள் பகுதியளவில் சேதம்

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை கீழ்பிரிவு தோட்டத்தில் நேற்றுக் காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 12வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் நான்கு வீடுகள் தீயினால் பகுதி அளவில் எரிந்து நாசமாகியுள்ளது. 

இந்த நான்கு வீ்டுகளிலும் இருந்த 20பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த தீ விபத்தின் போது, எவருக்கும் தீ காயங்கள் ஏற்படவில்லை என்பதோடு, சில பொருட்களே தீக்கிரையாகியுள்ளது. 

தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டு தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இதேவேளை இது தொடர்பாக ஹற்றன் பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இவர்களுக்கான நிவாரண உதவிகளை நோர்வூட் பிரதேச சபை தவிசாளரும், ஹற்றன் டிக்கோயா நகர சபை உறுப்பினர் எஸ்.ரட்ணகுமாரும் இணைந்து வழங்கியுள்ளனர். 

ஹற்றன் சுழற்சி நிருபர் 


Add new comment

Or log in with...