காலிமுகத்திடல் போராட்டம் பைத்தியக்கார கூட்டாக மாற்றம்

சபையில் விமல் வீரவன்ச எம்.பி சாடல்

மக்கள் போராட்டமாக ஆரம்பித்த காலிமுகத்திடல் போராட்டம் இப்போது போதைப்பொருள் மற்றும் பைத்தியக்கார கும்பல் போராட்டமாக மாற்றமடைந்துள்ளதாக விமல் வீரவன்ச எம். பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பத்தில் நியாயமான மக்கள் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது பைத்தியகாரத்தனமான, போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் மோசடியாளர்களின் கூட்டாக மாறியுள்ளது என்றும் விமல் வீரவன்ச எம் பி. நேற்று சபையில் கடுமையாக சாடினார்

நாட்டை அராஜக நிலைமைக்கு மாற்ற பைத்தியகாரர்கள் போன்று செயற்படும் போராட்டம் தொடர்பில் ஏன் இன்னும் பொறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? எனவும் அவர் சபையில் கேள்வி எழுப்பினார். 

பாராளுமன்றத்தில் நேற்று விஷேட கூற்றுஒன்றை முன்வைத்து உரையாற்றிய அவர், அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்: 

இயற்கை பசளை பயிர் செய்கை போன்ற சிறந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட காலிமுகத் திடல் போராட்டம் தற்போது இரசாயன பயிர் செய்கைக்கு ஏற்பட்ட நிலைமை போல் மாறியுள்ளது.  

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் இலங்கைக்கு வந்திருந்த போது, அவர்களின் நடவடிக்கைகளுக்கு காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தடையேற்படுத்தினர்.

நாடு ஸ்திரமற்ற நிலைமையில் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தி நாணய நிதியத்திடம் உதவி பெற்றுக்கொள்வதை தடுப்பதே போராட்டகாரர்களின் நோக்கம்.போராட்டகாரர்கள் நாட்டை அராஜக நிலைமைக்கு மாற்ற பைத்தியகாரர்கள் போன்று செயற்படும் போது ஏன் இன்னும் பொறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்  என வினவினார்.

லோரன்ஸ் செல்வநாயகம் ஷம்ஸ் பாஹிம் 


Add new comment

Or log in with...