4th ODI; SLvAUS: 4 ஓட்டங்களால் வெற்றி; 30 வருடங்களின் பின் தொடரை வென்ற இலங்கை (Highlights)

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் சர்வதேச போட்டித் தொடரின் நேற்றையதினம் இடம்பெற்ற 4ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில், இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் தனது கன்னி சதத்தை பதிவு செய்த சரித் அசலங்க 110 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பெட் கம்மின்ஸ், மிச்சல் மார்ஸ், மத்திவ் குனெமென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து 259 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

இறுதி ஓவரில், 19 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில், ஏற்கனவே தான் வீசிய ஒரு ஓவரில் 13 ஓட்டங்களை வீசிய அணித் தலைவர் பந்துவீசி 15 ஓட்டங்களை வழங்கியிருந்த போதிலும், இறுதிப் பந்தில் ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித்தலைவர் டேவிட் வோர்னர் 99 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்திருந்தார்.

இறுதி வரை போராடிய பெட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தனஞ்ச டி சில்வா, சாமிக்க கருணாரத்ன, ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக சரித் அசலங்க தெரிவானார்.

அதற்கமைய, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அந்த வகையில், இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியுடனான தொடரை 30 வருடங்களின் பின்னர் இலங்கையில் வைத்து கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை, கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SRI LANKA INNINGS (50 overs maximum)
BATTING   R B M 4s 6s SR
Niroshan Dickwella † st †Carey b Maxwell 1 3 8 0 0 33.33
Pathum Nissanka  c †Carey b Marsh 13 25 42 2 0 52.00
Kusal Mendis  b Cummins 14 21 22 1 1 66.66
Dhananjaya de Silva  c Maxwell b Marsh 60 61 90 7 0 98.36
Charith Asalanka  c Finch b Cummins 110 106 182 10 1 103.77
Dasun Shanaka (c) run out (Marsh/†Carey) 4 8 20 0 0 50.00
Dunith Wellalage  c Warner b Kuhnemann 19 35 43 0 0 54.28
Chamika Karunaratne  lbw b Kuhnemann 7 9 16 0 0 77.77
Wanindu Hasaranga de Silva  not out 21 20 35 3 0 105.00
Jeffrey Vandersay  run out (Cummins/†Carey) 0 2 4 0 0 0.00
Maheesh Theekshana  run out (sub [MJ Swepson]) 0 5 5 0 0 0.00
Extras (lb 2, nb 1, w 6) 9  
TOTAL 49 Ov (RR: 5.26) 258
 
Fall of wickets: 1-5 (Niroshan Dickwella, 1.2 ov), 2-26 (Kusal Mendis, 6.3 ov), 3-34 (Pathum Nissanka, 9.5 ov), 4-135 (Dhananjaya de Silva, 26.2 ov), 5-150 (Dasun Shanaka, 29.4 ov), 6-207 (Dunith Wellalage, 40.2 ov), 7-222 (Chamika Karunaratne, 42.5 ov), 8-256 (Charith Asalanka, 47.4 ov), 9-257 (Jeffrey Vandersay, 48.1 ov), 10-258 (Maheesh Theekshana, 48.6 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Josh Hazlewood 10 0 45 0 4.50 36 6 0 1 0
Glenn Maxwell 8 0 49 1 6.12 21 3 1 1 0
Matthew Kuhnemann 8 0 56 2 7.00 17 6 0 1 0
Pat Cummins 9 1 37 2 4.11 34 2 1 2 0
Mitchell Marsh 7 1 29 2 4.14 24 2 0 0 1
Cameron Green 5 0 27 0 5.40 13 3 0 0 0
Marnus Labuschagne 2 0 13 0 6.50 3 1 0 0 0
 
AUSTRALIA INNINGS (Target: 259 runs from 50 overs)
BATTING   R B M 4s 6s SR
David Warner  st †Dickwella b DM de Silva 99 112 169 12 0 88.39
Aaron Finch (c) lbw b Karunaratne 0 4 12 0 0 0.00
Mitchell Marsh  c DM de Silva b Wellalage 26 27 39 3 1 96.29
Marnus Labuschagne  lbw b Vandersay 14 21 37 0 0 66.66
Alex Carey † c Vandersay b PWH de Silva 19 20 26 2 0 95.00
Travis Head  b DM de Silva 27 33 45 3 0 81.81
Glenn Maxwell  lbw b Theekshana 1 3 6 0 0 33.33
Cameron Green  b Vandersay 13 25 39 0 0 52.00
Pat Cummins  lbw b Karunaratne 35 43 51 2 0 81.39
Matthew Kuhnemann  c Asalanka b Shanaka 15 12 31 3 0 125.00
Josh Hazlewood  not out 0 1 12 0 0 0.00
Extras (lb 1, nb 1, w 3) 5  
TOTAL 50 Ov (RR: 5.08) 254
 
Fall of wickets: 1-3 (Aaron Finch, 2.4 ov), 2-66 (Mitchell Marsh, 11.4 ov), 3-101 (Marnus Labuschagne, 19.3 ov), 4-131 (Alex Carey, 25.4 ov), 5-189 (Travis Head, 35.5 ov), 6-190 (Glenn Maxwell, 36.2 ov), 7-192 (David Warner, 37.1 ov), 8-223 (Cameron Green, 45.3 ov), 9-240 (Pat Cummins, 48.5 ov), 10-254 (Matthew Kuhnemann, 49.6 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Chamika Karunaratne 5 1 19 2 3.80 20 1 0 1 0
Maheesh Theekshana 10 1 40 1 4.00 41 6 0 0 0
Wanindu Hasaranga de Silva 10 0 52 1 5.20 29 5 0 0 0
Dunith Wellalage 5 0 29 1 5.80 14 1 1 1 0
Dhananjaya de Silva 10 0 39 2 3.90 33 2 0 0 0
Jeffrey Vandersay 7 0 40 2 5.71 19 4 0 1 0
Charith Asalanka 1 0 7 0 7.00 3 1 0 0 0
Dasun Shanaka 2 0 27 1 13.50 5 5 0 0 1

 


Add new comment

Or log in with...