இந்திய கிரிக்கெட் தொடருக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

இந்தியா, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் ரி 20 தொடர்களில் பங்கெடுக்கவுள்ள இலங்கையின் 19 பேர் அடங்கிய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கே 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆடவிருக்கின்றது.

இந்த சுற்றுப்பயணம் இம்மாதம் 23ஆம் திகதி நடைபெறும் ரி 20 தொடருடன் ஆரம்பமாகவிருப்பதோடு, அதன் பின்னர் ஒருநாள் தொடர் நடைபெறுகின்றது. இந்த நிலையில் இந்த தொடர்களில் பங்கெடுக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுத் தொடரில் ஆடியிருந்த வீராங்கனைகளுடன், தற்போது இந்திய அணிக்கு எதிரான தொடர்களுக்காக ஆறு வீராங்கனைகள் மேலதிகமாக இணைக்கப்பட்டிருக்கின்றனர். றனர்.

மேலதிகமாக இணைக்கப்பட்ட ஆறு வீராங்கனைகளில், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையினை பாகிஸ்தான் தொடர் காரணமாக தவறவிட்டிருந்த விஷ்மி குணரத்னவும் அடங்குகின்றார். இவர் தவிர இலங்கை மகளிர் அணியில் இணைந்திருக்கும் ஏனைய வீராங்கனைகளாக மல்ஷா செஹானி, ரஷ்மி டி சில்வா, கௌசானி நுத்யங்கனா, சத்யா தீபானி மற்றும் தாரிகா செவ்வந்தி ஆகிய வீராங்கனைகள் காணப்படுகின்றனர். இதில் ரஷ்மி டி சில்வா மற்றும் கௌசானி நுத்யான்கனா ஆகியோர் அறிமுக வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை – இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர், அடுத்த மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான அணிகளை தெரிவு செய்கின்ற, ஐ.சி.சி. இன் மகளிர் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்குகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை அணி – சமரி அத்தபத்து (தலைவி), ஹாசினி பெரேரா, கவிஷா டில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷா சஞ்சீவனி, ஒசதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, இனோக்கா ரணவீர, ஆச்சினி குலசூரிய, ஹர்சித சமரவிக்ரம, விஷ்மி குணரட்ன, மல்ஷா செஹானி, அமா காஞ்சனா, உதேசிகா ப்ராபோதினி, ரஷ்மி டி சில்வா, ஹன்சிமா கருணாரட்ன, கௌசானி நுத்யான்கனா, சத்யா சந்தீப்பனி, தாரிகா செவ்வன்தி.

சுற்றுத்தொடர் அட்டவணை


Add new comment

Or log in with...