சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு (21) கண்டி உதவி இந்தியத் தூதுவராலயம் ஒழுங்கு செய்த யோகா பயிற்சி மற்றும் தியான நிகழ்வுகள் கண்டி உதவி இந்தியத் தூதுவர் டாக்டர் எஸ். ஆத்திரா தலைமையில் இடம் பெற்றது.
கண்டி அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி மாவட்ட பிரதம செயலாளர் காமினி ராஜரட்ண கலந்து கொண்டார்.
மேற்படி யோகா பயிற்சியை யோகா குரு ஶ்ரீ மகேஷ் கொடிகார மற்றும் சந்திமா கொடிகார ஆகியோர் நடத்தியதுடன் தியானப் பயிற்சிகளை எஸ். வேலாயுதம் தலைமையிலான கண்டி பிரேமக்குமாரிகள் ராஜயோக நிலையத்தினர் மேற்கொண்டகர். 200 ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
(அக்குறணை குறூப் நிருபர்)
Add new comment