SLT-MOBITEL இனால் மேம்படுத்தப்பட்ட தொலைபேசி விவரக் கோவை அறிமுகம்

நுண், சிறு மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு சகல சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரப்படுத்தல் தீர்வுகளையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில், SLT-MOBITEL இன் முழு உரிமையாண்மையில் இயங்கும் SLT Digital Services (Pvt) Limited (SLT-DIGITAL) இனால் தேசிய வியாபார தொலைபேசி விவரக் கோவை ‘The Directory’ 2022 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய வியாபார தொலைபேசி விவரக் கோவையின் பிந்திய வெளியீடாக ‘The Directory’ 2022 அமைந்திருப்பதுடன், நாட்டில் வியாபாரத்தை மேற்கொள்வதற்கான புதிய சாதனமாகவும் அமைந்துள்ளது. பாவனையாளர்களுக்கு நட்பான வழிகாட்டல்களினூடாக மேம்படுத்தப்பட்ட உள்ளம்சங்கள் மெருகேற்றப்பட்ட வர்த்தக நாமத்தில் வழங்கப்படுவதுடன், ஏற்கனவே காணப்படும் மற்றும் எதிர்காலத்தில் இணையவுள்ள வாடிக்கையாளர்களுக்கு மற்றும் பதிவு செய்து கொண்டுள்ள விற்பனையாளர்களுக்கு மேலதிக பெறுமதியை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட தேசிய வியாபார தொலைபேசிக் கோவை 2022 இல் உறுதி செய்யப்பட்ட தொடர்பாடல் தகவல்கள் காணப்படுவதுடன், நாட்டு மக்களுக்கு தமக்கு அவசியமான தேடல்களை இலகுவாக மேற்கொள்ளக்கூடிய வகையிலும், தொழிற்துறை பிரிவுகளான ஹாட்வெயார், நிர்மாணம், மின்சாதனங்கள், இலத்திரனியல் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த தேடல் அம்சங்களையும் கொண்டுள்ளது.

புதிய வியாபார தொலைபேசி கோவையான ‘The Directory’ 2022 இன் முதல் பிரதி, SLT-MOBITEL இன் தவிசாளர் ரொஹான் பெர்னாண்டோவிடம், SLT-DIGITAL இன் பிரதம நிறைவேற்று அதிகாரி உபுல் மஞ்சநாயக்க கையளிப்பதையும், அருகாமையில் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன, SLT பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க மற்றும் SLT-DIGITAL நிர்வாக அணியின் பிரதிநிதிகள் காணப்படுகின்றனர்.


Add new comment

Or log in with...