வடக்கு, கிழக்கில் வழமை போல இயங்கிய பாடசாலைகள்

- மாணவர் வருகையில் வீழ்ச்சி
- கொழும்பு உட்பட நகர்ப்புறங்களில் பூட்டு

கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள், நகர்ப்புற பாடசாலைகள் மற்றும் மாகாணங்களிலுள்ள பிரதான நகர பாடசாலைகள் நேற்று பூட்டப்பட்டிருந்த போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாடசாலைகளில் நேற்று வழமைபோன்று கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் அவ்வாறான பாடசாலைகளில் நேற்று எதிர்பார்த்த அளவு மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோருக்கான போக்குவரத்து அசௌகரியங்கள் காணப்படாத குறைந்த எண்ணிக்கையான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை செயற்படுத்துவதற்கு கல்வி அமைச்சு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது. பாடசாலைகளுக்கு சமூகளிக்க முடியாத மாணவர்களுக்காக ஒன்லைன் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் எரிபொருள் நெருக்கடி காரணமாக முறையாக அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாக சம்பந்தப்பட்ட பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்கான எரிபொருளை பெற்றுத்தருமாறு சில பகுதிகளில் அத்தகைய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...