- அறிக்கை விட்டு வேலுகுமார் சுட்டிக்காட்டல்
தோட்ட மக்களுக்கு விசேட பொருள் விநியோக வழிமுறையும் நிவாரண திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
இன்று நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு எரிபொருட்களின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.
இந்நிலைமை நாட்டின் அனைத்து துறைகளின் செயற்பாட்டையும் ஸ்தம்பிதம் அடைய செய்திருக்கின்றது.
வழமையான நாட்களிலேயே முறையான விநியோக வழிமுறையில்லாத தோட்ட பகுதிகள் இதனால் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றது.
எனவே உடனடியாக தோட்ட மக்களுக்கு விசேட பொருள் விநியோக வழிமுறையும் நிவாரண திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும்.
தோட்டங்களின் வேலை நாட்களும் நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றது.
தோட்டங்களிலிருந்து சென்று நகர்புறங்களில் வேலை செய்தவர்களும் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.
இவ்வாறான சூழலில் தோட்ட மக்களை பாதுகாக்க விசேடமான நிவாரண திட்டமொன்று உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தியாவினால் வழங்கப்பட்ட நிவாரணப்பொருட்களும் தோட்ட மக்களுக்கு ஒழுங்கான முறையில் கிடைக்கப்பெறவில்லை.
Add new comment