இலங்கை விடயத்தில் தெளிவான நிலையில் இந்திய பிரதமர்

மோடியின் நிலைப்பாடு குறித்து ஜெய்சங்கர் விளக்கம்

அயல் நாடான இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியினை போக்கும் நடவடிக்கையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெளிவான தன்மையினை கொண்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை இணைந்து செயல்படுவதோடு, அதன் கொள்கை பரிந்துரைகள் மிகவும் கடுமையான தன்மையை கொண்டுள்ளது. எனினும் அதற்கமைய இலங்கை செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் குறித்த செவ்வியில் வலியுறுத்தியுள்ளார்.

 


Add new comment

Or log in with...