சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒரு நாள் சர்தேச கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
நேற்றையதினம் (16) கண்டி, பல்லேகலையில் பகலிரவு போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.4 ஒவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழையின் குறுக்கீட்டால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா மற்றும் தசுன் ஷானக ஆகியோர் தலா 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து டக்வேர்த் - லூயிஸ் (D/L) முறைப்படி அவுஸ்திரேலியா அணிக்கு 43 ஓவர்களில் 216 எனும் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 37.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஒட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
அவுஸ்திரேலியா அணி சார்பாக டேவிட் வோனர் 37 ஓட்டங்களையும், கிளன் மெக்ஸ்வெல் 30 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
The blossoming element - Dunith Wellalage claim 2 for 25
Full match Highlights: https://t.co/2r4HZou7fZ#SLvAUS pic.twitter.com/66CpStItOd— Sri Lanka Cricket (@OfficialSLC) June 17, 2022
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன 2 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர மற்றும் தனஞ்சய டி சில்வா, துமித் வெல்லாலகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Chamika Karunaratne powers to series-levelling win!
Full Match Highlights: https://t.co/2r4HZou7fZ#SLvAUS pic.twitter.com/TwW4C6aBVt— Sri Lanka Cricket (@OfficialSLC) June 17, 2022
போட்டியின் நாயகனாக சாமிக்க கருணாரத்ன தெரிவானார்.
அந்த வகையில், 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் தற்போது சமனிலையில் உள்ளது.
இத்தொடரின் முதல் 2 போட்டிகள் பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், ஏனைய 3 போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் 3ஆவது போட்டி எதிர்வரும் ஜூன் 19 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
BATTING | R | B | M | 4s | 6s | SR | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
Danushka Gunathilaka | c Kuhnemann b Cummins | 18 | 30 | 41 | 1 | 0 | 60.00 | ||
Pathum Nissanka | c †Carey b Kuhnemann | 14 | 17 | 24 | 3 | 0 | 82.35 | ||
Kusal Mendis † | c & b Maxwell | 36 | 41 | 75 | 2 | 1 | 87.80 | ||
Dhananjaya de Silva | c †Carey b Cummins | 34 | 41 | 45 | 2 | 1 | 82.92 | ||
Charith Asalanka | c Kuhnemann b Maxwell | 13 | 27 | 37 | 1 | 0 | 48.14 | ||
Dasun Shanaka (c) | c Maxwell b Swepson | 34 | 36 | 58 | 5 | 0 | 94.44 | ||
Chamika Karunaratne | c Cummins b Kuhnemann | 18 | 17 | 21 | 0 | 1 | 105.88 | ||
Dunith Wellalage | b Cummins | 20 | 35 | 38 | 1 | 1 | 57.14 | ||
Jeffrey Vandersay | c †Carey b Cummins | 7 | 10 | 17 | 0 | 0 | 70.00 | ||
Dushmantha Chameera | not out | 7 | 18 | 24 | 1 | 0 | 38.88 | ||
Maheesh Theekshana | not out | 11 | 14 | 17 | 1 | 0 | 78.57 | ||
Extras | (lb 5, w 3) | 8 | |||||||
TOTAL | 47.4 Ov (RR: 4.61) | 220/9 |
|
||||||
Fall of wickets: 1-26 (Pathum Nissanka, 5.5 ov), 2-35 (Danushka Gunathilaka, 9.2 ov), 3-96 (Dhananjaya de Silva, 20.4 ov), 4-108 (Kusal Mendis, 23.3 ov), 5-130 (Charith Asalanka, 28.5 ov), 6-159 (Chamika Karunaratne, 33.3 ov), 7-172 (Dasun Shanaka, 37.1 ov), 8-198 (Jeffrey Vandersay, 41.3 ov), 9-199 (Dunith Wellalage, 43.3 ov)
|
BOWLING | O | M | R | W | ECON | 0s | 4s | 6s | WD | NB |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
Josh Hazlewood | 7 | 1 | 26 | 0 | 3.71 | 27 | 3 | 0 | 0 | 0 |
Matthew Kuhnemann | 10 | 0 | 48 | 2 | 4.80 | 29 | 4 | 0 | 1 | 0 |
Glenn Maxwell | 10 | 2 | 35 | 2 | 3.50 | 39 | 2 | 1 | 1 | 0 |
Pat Cummins | 8.4 | 0 | 35 | 4 | 4.03 | 30 | 3 | 0 | 0 | 0 |
Mitchell Swepson | 10 | 0 | 58 | 1 | 5.80 | 30 | 5 | 2 | 1 | 0 |
Marnus Labuschagne | 2 | 0 | 13 | 0 | 6.50 | 5 | 0 | 1 | 0 | 0 |
BATTING | R | B | M | 4s | 6s | SR | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
David Warner | b de Silva | 37 | 51 | 60 | 5 | 0 | 72.54 | ||
Aaron Finch (c) | lbw b de Silva | 14 | 15 | 36 | 2 | 0 | 93.33 | ||
Steven Smith | c Theekshana b Karunaratne | 28 | 35 | 54 | 3 | 0 | 80.00 | ||
Travis Head | c Asalanka b Wellalage | 23 | 34 | 57 | 2 | 0 | 67.64 | ||
Marnus Labuschagne | c Shanaka b Wellalage | 18 | 30 | 40 | 0 | 0 | 60.00 | ||
Alex Carey † | run out (Karunaratne/†Mendis) | 15 | 20 | 44 | 1 | 0 | 75.00 | ||
Glenn Maxwell | c Shanaka b Karunaratne | 30 | 25 | 30 | 5 | 0 | 120.00 | ||
Pat Cummins | c Wellalage b Chameera | 4 | 6 | 10 | 1 | 0 | 66.66 | ||
Mitchell Swepson | b Karunaratne | 2 | 2 | 11 | 0 | 0 | 100.00 | ||
Matthew Kuhnemann | b Chameera | 1 | 2 | 10 | 0 | 0 | 50.00 | ||
Josh Hazlewood | not out | 4 | 3 | 5 | 1 | 0 | 133.33 | ||
Extras | (lb 5, w 8) | 13 | |||||||
TOTAL | 37.1 Ov (RR: 5.08) | 189 |
|
||||||
Fall of wickets: 1-39 (Aaron Finch, 7.2 ov), 2-62 (David Warner, 13.3 ov), 3-93 (Steven Smith, 19.6 ov), 4-123 (Travis Head, 26.2 ov), 5-132 (Marnus Labuschagne, 28.2 ov), 6-170 (Glenn Maxwell, 34.2 ov), 7-177 (Alex Carey, 34.6 ov), 8-181 (Pat Cummins, 35.6 ov), 9-185 (Mitchell Swepson, 36.3 ov), 10-189 (Matthew Kuhnemann, 37.1 ov)
|
BOWLING | O | M | R | W | ECON | 0s | 4s | 6s | WD | NB |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
Dushmantha Chameera | 6.1 | 0 | 19 | 2 | 3.08 | 27 | 2 | 0 | 1 | 0 |
Maheesh Theekshana | 8 | 0 | 44 | 0 | 5.50 | 25 | 5 | 0 | 2 | 0 |
Dhananjaya de Silva | 6 | 0 | 26 | 2 | 4.33 | 16 | 1 | 0 | 0 | 0 |
Jeffrey Vandersay | 5 | 1 | 23 | 0 | 4.60 | 20 | 4 | 0 | 0 | 0 |
Chamika Karunaratne | 7 | 0 | 47 | 3 | 6.71 | 18 | 5 | 0 | 3 | 0 |
Dunith Wellalage | 5 | 0 | 25 | 2 | 5.00 | 16 | 3 | 0 | 0 | 0 |
Add new comment