டயலொக் ஆசிஆட்டா தொடர்ந்து 4ஆவது ஆண்டாகவும் மிகவும் பெறுமதியான வர்த்தக நாமமாக தரப்படுத்தல்

- தொடர்ந்து 6ஆவது ஆண்டாகவும் Brand Finance இனால் ‘மிகவும் விரும்பப்படும் தொலைத்தொடர்பு வர்த்தக நாமம்’ என அங்கீகாரம்

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அதன் 19 ஆவது பதிப்பில், உலகின் முன்னணி சுயாதீன வர்த்தக நாம மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான Brand Finance இன் வருடாந்த ஆய்வில் தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் 'இலங்கையின் மிகவும் பெறுமதியான வர்த்தக நாமம்' என்ற பட்டத்தை பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளது. டயலொக் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் AAA இன் வர்த்தக மதிப்பீட்டைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், அத்துடன் தொடர்ந்து 15 வது ஆண்டாக ‘மிகவும் பெறுமதியான தொலைத்தொடர்பு வர்த்தக நாமம்’ என்ற பட்டத்தையும் இலங்கையின் வாழ்வாதாரங்கள் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் வளப்படுத்துதல் ஆகிய வர்த்தக நாம நெறிமுறைகளை மீண்டும் உறுதிப்படுத்தியது.

அணுகக்கூடிய, உள்ளடக்கிய, மற்றும் வாடிக்கையாளர்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கு ஒரே மாதிரியாக பயனளிக்கும் நிலையான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதன் மூலம், இலங்கையை டிஜிட்டல் தேசமாக உயர்த்துவதில் டயலொக் தொடர்ந்து முன்னின்று செயற்படுகின்றது. இந்த பாராட்டுக்கள், 17 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் வர்த்தக நாமத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது.

இந்தச் சாதனைகள், தொற்றுபரவலின் போது, ​​நாட்டின் சுகாதாரப் பாதுகாப்புத் துறையின் முன்னேற்றம், சுகாதாரப் பணியாளர்களுக்கான தகவல் தொடர்பு வசதிகளை வழங்குதல் மற்றும் தேசிய 1390 கொவிட்-19 ஒருங்கிணைந்த வீட்டு அடிப்படையிலான பராமரிப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட சமூகங்களின் பல அம்சங்களை ஆதரிப்பதில் டயலொக்கின் தொடர்ச்சியான முயற்சிகளையும் அங்கீகரிக்கிறது. மேலும், நிறுவனம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு மிகப்பெரிய இலவச டிஜிட்டல் கல்வி தளமான நெனச தொலைக்காட்சியை விரிவுபடுத்தியது, - அவசியமான 100,000 பாடசாலை மாணவர்களுக்கு டேட்டா புலமைப்பரிசில்களை வழங்கியது மற்றும் நாட்டிலுள்ள அனைத்து சிறுவர் மேம்பாட்டு மையங்களுக்கும் இலவச இணைப்பு வசதிகளை விரிவுபடுத்தியது.

மேலும், பொருளாதார நெருக்கடியினால் இலங்கை முழுவதிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பின்மைக்கு எதிராகப் போராடும் நோக்கில், 2022 ஏப்ரல் மாதத்தில் பல நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஆல் ‘மனிதநேய ஒன்றிணைவு’ எனும் மனிதாபிமான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. MAS Holdings, Hemas Holdings PLC, CBL Group, Citi bank, Sunshine Holdings PLC, சர்வோதய சிரமதான சங்கம் போன்ற பல ஒத்த எண்ணம் கொண்ட பங்காளர்களுடன் இணைந்து, PwC ஸ்ரீலங்காவுடன் இணைந்து 200,000 குடும்பங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் மிகவும் பெறுமதியான வர்த்தக நாமமாக 4 ஆவது ஆண்டாகவும், தொடர்ந்து 15 ஆவது ஆண்டாக ‘மிகவும் பெறுமதியான தொலைத்தொடர்பு வர்த்தக நாமமாகவும்’இ தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக ‘அதிக விரும்பப்படும் தொலைத்தொடர்பு வர்த்தக நாமமாகவும்’ தரவரிசைப்படுத்தப்படுவதையிட்டு நாங்கள் பெருமையடைகிறோம். இந்த அங்கீகாரம், எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களின் உணர்வுகளை எதிரொலிக்கிறது" என்றார்.

Brand Finance Lanka நிறுவனத்தின் தலைவர் ருசி குணவர்தன கருத்து தெரிவிக்கையில் "தொலைத்தொடர்புத் துறையில் நாம் அளவிடும் பல குறிகாட்டிகளில் வர்த்தக நாம வலிமையைக் கட்டியெழுப்புவதற்கான அதன் திறன், டயலொக் வர்த்க நாமத்தின் மதிப்பை அதிகரிக்கச் செய்கிறது" என்றார்.


Add new comment

Or log in with...