சுதந்திர பலுசிஸ்தான் அமைப்பு கண்டனம்

காணமலாக்கப்பட்டோரது குடும்பத்தினரின் அமைதியான செயற்பாடுகள் மற்றும் கராச்சியில் இடம்பெறும் ஏனைய அமைதி ஆர்ப்பாட்டங்கள் மீது பாகிஸ்தான் படைகளின் தாக்குதல்களை சுதந்திர பலுசிஸ்தான் அமைப்பு கண்டித்துள்ளது.

கராச்சி பொலிஸார் கடந்த திங்களன்று பெண்கள் உட்பட பல டஜன் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்திருந்தனர். காணாமல்போன இரு மாணவர்கள் தொடர்பில் சிந்த் சட்டமன்றத்திற்கு முன்னாள் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


Add new comment

Or log in with...