நாவலப்பிட்டியில் திறக்கப்பட்ட புதிய காட்சியறையுடன் தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் DSI

இலங்கையின் முதன்மையான பாதணி வர்த்தக நாமமான DSI, அதன் பரந்த அளவிலான நம்பகமான தயாரிப்புகளை விரிவான வாடிக்யாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, நாவலப்பிட்டியில் அண்மையில் திறக்கப்பட்ட சமீபத்திய காட்சியறையுடன் அதன் வலையமைப்பின் விரிவாக்க முயற்சிகளைத் தொடர்கிறது.

புதிய DSI காட்சியறை திறப்பு நிகழ்வானது, இலங்கை பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கும் இந்நேரத்தில் இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக கருதப்படுகின்றது. இதனால் DSI இன் பின்னடைவு மற்றும் நிலவும் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்கும் தன்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

D. Samson & Sons (Pvt.) Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் துசித ராஜபக்ஷ, பணிப்பாளர் அசங்க ராஜபக்ஷ, பொது முகாமையாளர் பிரதீப் சமரதுங்க, தேசிய விற்பனை முகாமையாளர் – சில்லறை விற்பனையாளர் நளீன் வீரவர்தன, அழைப்பினை ஏற்று வருகை தந்திருந்தோர் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் முன்னிலையில் இக் காட்சியறை திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவில் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கையில்,

துசித ராஜபக்ச, “இன்னுமொரு காட்சியறையை திறந்து வைத்து DSI பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதை காணும் போது உண்மையிலேயே எங்களுக்கு பெருமிதம் அளிக்கின்றது ஒரு நிறுவனமாக DSI எப்போதும் தனிச்சிறப்புவாய்ந்த தரம் மற்றும் தரநிர்ணயங்களுக்கு ஒத்ததாக உள்ளது, மேலும் பல தசாப்தங்களாக மக்களால் மிகவும் விரும்பப்படும் வியாபாரக்குறியாக இருந்து வருகிறது. நடைமுறையில் பல சவால்கள் இருந்தபோதிலும், எங்கள் விரிவாக்க முயற்சிகளைத் தொடர்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், இதன் மூலம் எங்கள் நம்பிக்கைமிகு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குகின்றோம்” எனக் கூறினார்.

மிக உயர்ந்த சேவை தரம் மற்றும் சௌகரியத்திற்கு முன்னுரிமை அளித்து, நாவலப்பிட்டியில் உள்ள புதிய DSI காட்சியறையில் நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த ஷொப்பிங் அனுபவத்தை வழங்க உறுதிபூண்டுள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய சில்லறை விற்பனை வலையமைப்புக்களில்; ஒன்றான D. சாம்சன் & சன்ஸ் (பிரைவேட்) லிமிடெட், U Softo, Ranpa, Samsons, DSI Supersport,  Beat,  Beach,  Petalz, உட்பட பல உள்;ர் பாதணி வியாபாரக்குறிகளின் ஒரே விநியோகத்தராகவும் Fun Souls, Tamik, Waves, Jessica, Melissa, AVI, Clarks, Redtape, Reebok, Puma, Fila, U.S. Polo, Adidas, Arrow, W, Modare, Inc.5, Aurelia, Asics மற்றும் Von Wellx போன்ற பிரபலமான சர்வதேச வியாபாரக் குறிகளின் விநியோகத்தராகவும் செயற்படுகின்றது.


Add new comment

Or log in with...