ஜூன் 13 விடுமுறையாக இருப்பினும் கடவுச்சீட்டு பெற நாட்டின் அனைத்து அலுவலகங்களும் திறப்பு

நாளை திங்கட்கிழமை ஜூன் 13ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அன்றையதினம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள சேவைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதான அலுவலகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் நாளையதினம் (13) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 10 ஆம் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 13/ 2022 இன் பிரகாரம் ஜூன் 13ஆம் திகதி அரசு அலுவலர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ஜூன் 13ஆம் திகதி திங்கட்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய அலுவலகங்களும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள சேவைகளைப் பெற முற்பதிவு செய்திருப்பது அவசியமென அத்திணைக்களம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...