பாகிஸ்தான் கணனிகள், விளையாட்டு உபகரணங்கள், உலர் உணவுகள் உள்ளிட்டவை அன்பளிப்பு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) உமர் பாரூக் பர்கி, பாகிஸ்தான் தூதரக ஜெனரல் அப்சல் மரிக்கார் ஆகியோர் மாத்தளை கொங்கஹமுல்ல கிபாலராமய விகாரைக்கு விஜயம் செய்து பாடசாலை தகவல் தொழில்நுட்ப மையத்திற்கான கணனிகள், பெண் பயிற்சி மையத்திற்கான தையல் இயந்திரங்கள் ஆகியவற்றை வழங்கி வைத்தனர்.

மேலும், கவுடுபெல்ல மகா வித்தியாலய அதிபரிடம் கணனி, உதைபந்தாட்டம , கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களும் பரிசாக வழங்கப்பட்டது.

நட்பு நாடான பாகிஸ்தான், தேவையான நேரத்தில் இலங்கைக்கு எப்போதும் ஆதரவளிக்கின்றமைக்காக விகாராதிபதி தமது நன்றியினை தெரிவித்தார்.

மேலும், மதகுருக்கள் வசிப்பதற்காக கட்டப்பட்ட "அவாசகியை" எனும் கட்டடத்தை பரிசளித்ததற்கும் அப்சல் மரிக்காருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இங்கு கருத்துதெரிவித்த உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை ) உமர் ஃபாரூக் பர்கி, கட்டடத்தைப் பார்வையிட்டு திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், மக்கள், விகாரையின் விகாராதிபதி தமக்கு காட்டிய அன்பு, ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

இறுதியாக, கிராமத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.


Add new comment

Or log in with...