- 3 ஆவது ரி20 பல்லேகலவில் சனிக்கிழமை
- ஜூன் 14 - ஜூலை 08 வரை 5 ஒரு நாள், 2 டெஸ்ட்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரை அவுஸ்திரேலியா அணி 2 - 0 என கைப்பற்றியுள்ளது.
நேற்றையதினம் (08) இரவு இடம்பெற்ற இத்தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியிருந்தது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதனடிப்படையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 39 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அவுஸ்திரேலிய அணி சார்பில் கேன் ரிச்சர்ட்சன், ஜெயி ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, க்ளன் மெக்ஸவெல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 125 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, முதல் இரு விக்கெட்டுக்களை இழந்ததன் பின்னர் தடுமாற்றங்களை எதிர்கொண்டது.
எனினும் பின்னர் மெத்தியூவ் வைட்டின் நிதானமான துடுப்பாட்டத்தின் ஊடாக சரிவில் இருந்து மீண்டது. இறுதியில் 17.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அவுஸ்திரேலியா அணி அடைந்தது.
இலங்கை அணி சார்பில், வணிந்து ஹசரங்க 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக மெத்தியூவ் வைட் தெரிவு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவது ரி20 போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (11) கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கிடையிலான ரி20 போட்டிகள் ஜூன் 07, 08, 11ஆம் திகதிகளில் இடம்பெறுவதோடு, முதல் இரு போட்டிகள் கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்திலும், மற்றைய போட்டி கண்டி, பல்லேகலை மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜூன் 14 - 24 வரை 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் இடம்பெறவுள்ளது.
அதன் பின்னர் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர், ஜூன் 29 - ஜூலை 08 வரை இடம்பெறவுள்ளது.
BATTING | R | B | M | 4s | 6s | SR | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Marsh b JA Richardson | 3 | 6 | 12 | 0 | 0 | 50.00 | ||
Danushka Gunathilaka | c Marsh b Maxwell | 4 | 4 | 3 | 1 | 0 | 100.00 | ||
Charith Asalanka | c Finch b Maxwell | 39 | 33 | 51 | 2 | 2 | 118.18 | ||
Kusal Mendis † | hit wicket b JA Richardson | 36 | 36 | 55 | 2 | 1 | 100.00 | ||
Bhanuka Rajapaksa | c Hazlewood b KW Richardson | 13 | 11 | 24 | 1 | 0 | 118.18 | ||
Dasun Shanaka (c) | c Finch b KW Richardson | 14 | 17 | 26 | 2 | 0 | 82.35 | ||
Wanindu Hasaranga de Silva | c Warner b JA Richardson | 12 | 8 | 13 | 2 | 0 | 150.00 | ||
Chamika Karunaratne | c Agar b KW Richardson | 0 | 2 | 7 | 0 | 0 | 0.00 | ||
Dushmantha Chameera | c Agar b KW Richardson | 0 | 1 | 2 | 0 | 0 | 0.00 | ||
Maheesh Theekshana | not out | 1 | 1 | 4 | 0 | 0 | 100.00 | ||
Nuwan Thushara | not out | 2 | 1 | 2 | 0 | 0 | 200.00 | ||
Extras | 0 | ||||||||
TOTAL | 20 Ov (RR: 6.20) | 124/9 |
|
||||||
Fall of wickets: 1-5 (Danushka Gunathilaka, 0.5 ov), 2-7 (Pathum Nissanka, 2.4 ov), 3-73 (Charith Asalanka, 11.5 ov), 4-90 (Kusal Mendis, 14.1 ov), 5-101 (Bhanuka Rajapaksa, 16.2 ov), 6-121 (Wanindu Hasaranga de Silva, 18.6 ov), 7-121 (Dasun Shanaka, 19.1 ov), 8-121 (Dushmantha Chameera, 19.2 ov), 9-121 (Chamika Karunaratne, 19.4 ov)
|
BOWLING | O | M | R | W | ECON | 0s | 4s | 6s | WD | NB |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
Glenn Maxwell | 3 | 0 | 18 | 2 | 6.00 | 7 | 2 | 0 | 0 | 0 |
Josh Hazlewood | 4 | 1 | 16 | 0 | 4.00 | 13 | 1 | 0 | 0 | 0 |
Jhye Richardson | 4 | 0 | 26 | 3 | 6.50 | 13 | 3 | 1 | 0 | 0 |
Kane Richardson | 4 | 0 | 30 | 4 | 7.50 | 11 | 3 | 1 | 0 | 0 |
Ashton Agar | 4 | 0 | 27 | 0 | 6.75 | 8 | 1 | 1 | 0 | 0 |
Mitchell Marsh | 1 | 0 | 7 | 0 | 7.00 | 1 | 0 | 0 | 0 | 0 |
BATTING | R | B | M | 4s | 6s | SR | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
Aaron Finch (c) | c Gunathilaka b de Silva | 24 | 13 | 16 | 4 | 0 | 184.61 | ||
David Warner | run out (Nissanka/†Mendis) | 21 | 10 | 44 | 3 | 1 | 210.00 | ||
Mitchell Marsh | lbw b de Silva | 11 | 7 | 13 | 2 | 0 | 157.14 | ||
Steven Smith | lbw b Thushara | 5 | 4 | 6 | 1 | 0 | 125.00 | ||
Glenn Maxwell | c Gunathilaka b de Silva | 19 | 19 | 43 | 0 | 0 | 100.00 | ||
Marcus Stoinis | c Asalanka b Chameera | 9 | 7 | 15 | 0 | 1 | 128.57 | ||
Matthew Wade † | not out | 26 | 26 | 44 | 2 | 0 | 100.00 | ||
Ashton Agar | b de Silva | 0 | 1 | 3 | 0 | 0 | 0.00 | ||
Jhye Richardson | not out | 9 | 20 | 24 | 0 | 0 | 45.00 | ||
Extras | (w 2) | 2 | |||||||
TOTAL | 17.5 Ov (RR: 7.06) | 126/7 |
|
||||||
Did not bat: Kane Richardson, Josh Hazlewood
|
|||||||||
Fall of wickets: 1-33 (Aaron Finch, 2.4 ov), 2-53 (Mitchell Marsh, 4.4 ov), 3-58 (Steven Smith, 5.2 ov), 4-64 (David Warner, 6.2 ov), 5-80 (Marcus Stoinis, 8.4 ov), 6-99 (Glenn Maxwell, 11.4 ov), 7-99 (Ashton Agar, 11.5 ov)
|
BOWLING | O | M | R | W | ECON | 0s | 4s | 6s | WD | NB |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
Maheesh Theekshana | 4 | 0 | 29 | 0 | 7.25 | 9 | 3 | 0 | 1 | 0 |
Dushmantha Chameera | 4 | 0 | 31 | 1 | 7.75 | 9 | 2 | 1 | 1 | 0 |
Wanindu Hasaranga de Silva | 4 | 0 | 33 | 4 | 8.25 | 9 | 3 | 1 | 0 | 0 |
Nuwan Thushara | 2 | 0 | 18 | 1 | 9.00 | 4 | 3 | 0 | 0 | 0 |
Charith Asalanka | 3 | 0 | 7 | 0 | 2.33 | 11 | 0 | 0 | 0 | 0 |
Danushka Gunathilaka | 0.5 | 0 | 8 | 0 | 9.60 | 1 | 1 | 0 | 0 | 0 |
Add new comment