ஜோன்ஸ்டனை தேடும் பணிகள் தொடர்கின்றன

- பல பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் விசாரணை

பல குழுக்கள் அனுப்பப்பட்ட போதிலும், மே 9 ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்னும் கைது செய்யவில்லை.

முன்னாள் அமைச்சரைக் கண்டுபிடிப்பதற்காக பல பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வர் சந்தேகநபர்களாக கடந்த வாரம் சட்ட மா அதிபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...